'எனக்கு ஓட்டு போட சொல்றேன்.. போட மாட்டிக்கிறாங்க.. நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?' - சரத்குமார் ஆவேசம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அந்த கட்சி சார்பில் போதைப்பொருளை ஒழிக்கவும், முழு மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் நடுவே பேட்டியளித்த நடிகர் சரத்குமார்; நான் கூறிய ரம்மி விளையாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். தமக்கு வாக்களிக்குமாறு கேட்டால் யாரும் அளிப்பதில்லையே என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த நாள் முதல் அந்த விளம்பரத்தின் நான் நடிப்பதில்லை என்றும் சரத்குமார் விளக்கம் அளித்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரத்தை ஒளிபரப்புகிறார்கள் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். 2 வருஷத்துக்கு முன்பே, ரம்மி தடை சட்டம் வந்திருந்தால் விளம்பரத்தில் நடித்திருக்க மாட்டேன். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் மட்டுமல்லாமல் நடிகர் ஷாருக்கான், தோனி ஆகியோரும் நடிக்கின்றனர் என்றும் சரத்குமார் விளக்கம் அளித்தார். ரம்மி விளையாட அறிவு வேண்டும் என்று கூறிய சரத்குமார் அது ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு என்றும் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு சட்ட மசோதா மற்றும் அவசர சட்டத்தை இயற்றியது. இந்த சூழலில் இந்த கருத்தை சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: