மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தெற்கு பகுதியில் நேற்றிரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். வீட்டில் இருந்த மக்கள் வெளியே வந்தனர். சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மெக்சிகோவில் நடந்த நிலநடுக்கத்தின் மையம் தெற்கு குரேரோவில் உள்ள கோரல் ஃபால்சோவிலிருந்து வடமேற்கே தொலைவில் இருந்தது.

மெக்சிகோவின் அகாபுல்கோ மற்றும் ஜிஹுவாடெனெஜோவின் கடற்கரை ஓய்வு விடுதிகளுக்கு இடையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: