சுஷாந்த் சிங் காதலி ரியா மும்பை தொழிலதிபருடன் ‘டேட்டிங்’

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை புறநகர் பகுதியிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பின்னணியில் அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்தி, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து 2 ஆண்டுகளான நிலையில், தற்போது ரியா சக்ரபோர்த்தி மும்பை தொழிலதிபர் சஜ்தேவ் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருவரும் தங்கள் டேட்டிங் வாழ்க்கையை மறைப்பதாகவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மும்பையில் பாலிவுட் தயாரிப்பாளர் அம்ரித் பால் சிங் பிந்த்ராவின் நிகழ்ச்சியில் ரியா சக்ர போர்த்தி பங்கேற்றார். அவருடன் சஜ்தேவ் சகோதரி சீமா சஜ்தே, அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரும் ஒரே காரில் வந்தனர். இதனால் சஜ்தேவ், ரியா சக்ரபோர்த்தியின் ேடட்டிங் விவகாரம் பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Stories: