அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு .

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமரவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மேல்முறையிட்டு தாரர்களுள் ஒருவரான வைரமுத்து சார்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும், மேல்முறையீட்டு வழக்கு காரணாமாக கட்சி திருத்த விதிகளை அங்கீகரிக்காததால், கட்சி செயல்படாததால் நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

முனிசிபல் தேர்தல் வரவுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு இதுகுறித்து ஏதாவது நோட்டீஸ் ஏதாவது அளித்தீர்களா, இதற்கு எப்படி தீர்வு காண்பது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். மேலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை தொடர்பாக இடை ஈட்டு மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். அந்த இடை ஈட்டு மனுவுக்கு ஓபிஎஸ் தரப்பும் 2 நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைவரும் தயாராக இருக்கும்பட்சத்தில் நாங்கள் இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளோம் என நீதிபதிக்கு தெரிவித்தனர்

Related Stories: