மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்காவிட்டால் அபராதம்-சித்தூர் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சித்தூர் : சித்தூர் மாநகராட்சியில் மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் அருணா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சித்தூர் மாநகரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆணையர் அருணா நேற்று மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

50 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். காந்தி சாலை, சர்ச்சை தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும், மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். விதி மீறினால் ₹50 முதல் ₹100 வரை அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து உள்ளார்கள்.

மாநகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும்  நாள்தோறும் ஆய்வு நடத்த உள்ளேன். சித்தூர் மாநகரத்தை பொருத்தவரை தூய்மை மாநகரமாக அமைக்க வேண்டும். பொதுமக்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஆய்வின்போது தூய்மை பணியாளர் துறை ஆய்வாளர் சின்னய்யா, சுகாதாரத்துறை அதிகாரி அணில் நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Related Stories: