ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை-ஐதராபாத் இன்று மோதல்

சென்னை: 11 - அணிகள் இடையிலான 9-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., நடப்பு சாம்பியன் ஐதராபாத்துடன் மோதுகிறது. ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி கண்டுள்ளது.

முந்தைய 2 லீக் ஆட்டங்களில் அந்த அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி அடைந்து இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் ஒடிசாவிடம் தோற்றது. இரு அணிகளும் வெற்றிபெற வரிந்துகட்டும் என்பதால் இன்றைய போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: