அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் மோசடி: தாசில்தார் மீது புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலத்தை சேர்ந்தவர் சுதாகர் (34). இவர் அரசு வேலை தேடி வந்தார். இவரை, கிருஷ்ணகிரி அம்மன் நகரில் வசித்து வரும் யாரப்பாஷா என்பவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதேபோல் சுதாகருக்கு தெரிந்த 26 பேரிடமும் அவர் பேசினார்.

பின்னர் அந்த 27 பேரிடம் இருந்து கடந்த 1.10.2017 முதல் 31.12.2019 வரை சிறிது சிறிதாக யாரப் பாஷா, ஓய்வு பெற்ற தாசில்தார் சண்முகம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன், விழுப்புரத்தில் டிஆர்பி பிஏவாக இருக்கும் ரகுக்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 78 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை வாங்கினர். மேலும் போலியாக அரசு வேலைக்கான உத்தரவையும் வழங்கினர்.

அதனை வேலைக்கு எடுத்து சென்றபோது அவை போலி என தெரியவந்தது. இதுகுறித்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சுதாகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: