82,000 இந்தியர்களுக்கு இந்தாண்டு கல்வி விசா: அமெரிக்க தூதர் தகவல்

புதுடெல்லி: ``இந்தாண்டு 82,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க பொறுப்பு தூதர் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்கா செல்வதற்கான குறிப்பாக தொழில் முறை பயணத்துக்கான பி1, சுற்றுலாவுக்கான பி2 விசா பெறுவதற்கு பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை குறைப்பதற்காக வாஷிங்டனில் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க பொறுப்பு தூதர் எலிசபெத், ``விசா பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு இறங்கி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகளவு விசா வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் கூடுதல் விசா வழங்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். நடப்பாண்டில் 82,000 இந்தியர்களுக்கு மாணவர் விசா வழங்கப்பட்டுள்ளது,’’ என தெரிவித்தார்.

Related Stories: