பிரபல பாடகர் கன்யே வெஸ்ட் டிவிட்டர் முடக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது  கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட். பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.  அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில், டிவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவித்து அவரது கணக்கு முடக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: