மகாராஷ்டிராவில் ஏப்ரல் 1 முதல் காகிதம் இல்லா அரசு அலுவலகங்கள்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் மின்மயமாக்கல் முறையில் நிர்வாக அமைப்பு செயல்பட உள்ளதால் காகிதம் இல்லாமல் அலுவலகங்கள் செயல்படும் என்று மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இதுதொடர்பான அறிக்கையில்,’இ-நிர்வாகம் முறையானது அரசு பணிகள் வேகமாக செயல்பட உதவும். மேலும் அரசு பணிகள் அனைத்தும் காகிதமற்றதாக இருக்கும். அனைத்து அரசு துறை அலுவலகங்களும் மின்-அலுவலக முறைக்கு மாற்றப்படும். அதன் பின்னர் அதிகாரிகள் தங்கள் மொபைல் போன்களில் கூட கோப்பு ஆவணங்களை பார்க்கலாம்’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.

Related Stories: