ரவுடி மர்ம சாவில் திருப்பம் போதை தகராறில் கொன்றது அம்பலம்: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரணையில், தண்டையார்பேட்டை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜா(எ) திருட்டு ராஜா (38) என தெரியவந்தது. ேமலும் விசாரணையில், எர்ணாவூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங் (27), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன் (30) ஆகியோரும், ரவுடி ராஜாவும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த குகன், தேசிங்கு ஆகியோர் ராஜாவை சரமாரியாக அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து குகன், தேசிங் ஆகியோரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: