டாக்கா சென்றது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 4ம் தேதி மிர்பூரில் நடக்கிறது 2வது போட்டி 7ம் தேதி, 3வது போட்டி 10ம் தேதி சட்டோகிராமில் நடக்கிறது. இதற்காக கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் விராட்கோஹ்லி, கே.எல்.ராகுல், முகமது ஷமி உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியினர் இன்று டாக்கா சென்றனர்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அணியுடன் சென்றார். நியூசிலாந்தில் தொடரில் ஆடிய தவான், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் நாளை அணியுடன் இணைகின்றனர்.

Related Stories: