விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடாது: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்..!

டெல்லி: விமான போக்குவரத்து கருவிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் அக்.1ம் தேதி அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்க கூடாது என தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமான போக்குவரத்துக்கான மின்னணு கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து 2.1 கி.மீ.க்கு அப்பால் மட்டுமே கோபுரங்களை அமைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: