சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: