ஆஸி.க்கு எதிரான ஹாக்கி தொடர் இந்தியாவுக்கு முதல் வெற்றி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஹாக்கி டெஸ்டில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 5-4, 2வது ஆட்டத்தில் 7-4 என்ற கோல் கணக்கில்  வென்ற ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க, 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் அபாரமாக விளையாடிய இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (11வது நிமிடம்), அபிஷேக் (47’), ஷம்ஷெர் சிங் (57’), அக்‌ஷ்தீப் சிங் (60வது நிமிடம்) கோல் போட்டனர். ஆஸி. வீரர்கள் ஜாக் வெல்ச் (25’), கேப்டன் ஆரன் ஸலேவ்ஸ்கி (32’), நாதன் எப்ராமஸ் (59’) ஆகியோர் கோல் அடித்தனர்.தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்த நிலையில், எஞ்சிய  2 ஆட்டங்கள் டிச. 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளன.

Related Stories: