ரோஜர் பின்னி பதவிக்கு மருமகளால் ஆபத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36வது தலைவராக ரோஜர் பின்னி கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றார். இந்நிலையில் அவர் பொறுப்புக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மருமகளால் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. சஞ்சீவ் குப்தா என்ற நபர் ரோஜர் பின்னி மீது புகார் அளித்துள்ளார். அதில் ரோஜர் பின்னியின் மருமகளான மாயந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்திய  அணி விளையாடும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.

இதன் மூலம் தனது பதவியை ரோஜர் பின்னி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது பிசிசிஐ நிர்வாகியான வினித் சரண் ரோஜர் பின்னிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பிசிசிஐயின் விதியை நீங்கள் மீறி இருப்பதாக தங்கள் மீது புகார் சுமத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து நீங்கள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.

Related Stories: