திண்டுக்கலில் கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சுவாதீனம் பெறப்பட்டது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் நிலம் சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,  இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (29.11.2022) திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் நிலம் திண்டுக்கல் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் படி சட்ட பிரிவு 78 மற்றும் 79 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்று மனுவின் படி 21 ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து இன்று (29.11.2022) வருவாய் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் வி.சுரேஷ் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும். இந்நிகழ்வின்போது குஜிலியம்பாறை வட்டாட்சியர் கே.ரமேஷ், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) விஜயலெட்சுமி, குஜிலியம்பாறை காவல் ஆய்வாளர் சரத்குமார், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: