திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன்.

இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய அணி துணைச்செயலாளர்கள் -எல்.வெங்கடாசலம், ஆடுதுறை உத்திராபதி, பேராசிரியர் க.சேவுகப் பெருமாள், ஆர்எம்.டி. ரவீந்திரன், பெருநாழி போஸ், சி.நேரு பாண்டியன், அ.திராவிட மணி, மேல்புதூர் ஆர்.ஸ்ரீதர், கே.எஸ்.எம். நாதன், தசரதன், பிரம்மபுரம் பழனி. இலக்கிய அணிப் பொருளாளர்-டாக்டர் நா.சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: