சீனா உடனான உறவுகளின் பொற்காலம் முடிந்து விட்டது: லண்டன் நிகழ்வில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு

லண்டன்: சீனா உடனான உறவுகளின் பொற்காலம் முடிந்து விட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விமர்சனம் செய்துள்ளார். லண்டனில் நடைபெற்ற லாட் மேயர் விருது நிகழ்வில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசின் வெளியுறவு கொள்கைகளை குறித்து பேசினார். சீனா உடனான அனுகுமுறையை பிரிட்டன் அரசு மேம்படுத்த வேண்டும் என்று அப்போது சுனக் குறிப்பிட்டார்.

சீனா உடனான உறவுகளின் பொற்காலம் முடிந்து விட்டதாக குறிப்பிட்ட ரிஷி சுனக் சீனா, பிரிட்டனின் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு சவாலாக இருப்பதாகக் கூறினார். அண்டை நாடுகள் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யா ஐ.நா. சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு சவால் விடுவதாக உள்ளது என்றும் ரிஷி சுனக் விமர்சித்தார். உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள மனிதாபிமானம் மற்றும் கொடூர தாக்குதலின் விளைவுகளை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

Related Stories: