சிவகிரி வனப்பகுதியில் பெண் யானை சாவு

சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே வனப்பகுதியில் உயிருக்கு போராடிய  நிலையில் மீட்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் மருத்துவக் குழுவினரின் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் அடிக்கடி மலை அடிவாரப்பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாசுதேவநல்லூர் அருகே தலையணைப் பகுதியில் பெண் யானை ஒன்று நோய்பாதிப்பு ஏற்பட்டு  உயிருக்கு போராடி கொண்டிருந்தது  தெரிய வந்தது.  இதையடுத்து  மாவட்ட வன அதிகாரி முருகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் கால்நடை மருத்துவக் குழுவினருடன் தலையணைப் பகுதிக்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும்  யானைக்கு உணவும் வழங்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் யானை, இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தது.

Related Stories: