சினிமா, ஊடகங்களில் நேதாஜி வரலாறு சிதைக்கப்படுகிறது: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கொல்கத்தா: திரைப்படங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சாதனைகள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேதாஜியின் உறவினர்களான சவுமியா சங்கர் போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘‘திரைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம்  நேதாஜி பற்றி சரிபார்க்கப்படாத தகவல்கள் பரப்பி சிலர் பணம் சம்பாதிக்கின்றனர்.

இதற்காக நேதாஜியின் வாழ்க்கை வரலாறையும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றையும் சிதைக்கின்றனர். நேதாஜியின் வரலாறை எந்த திரிபும் இல்லாமல், பொய் தகவல்கள் இல்லாமலும் வெளியிட வேண்டும். எனவே, நேதாஜியின் வரலாறு பொது களத்திற்கு கொண்டு வரும் முன்பாக அதை சரிபார்க்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: