மணவாடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 2 கிமீ தூர் வாரி புதிய குளம் சீரமைப்பு

கரூர் : கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் அமைந்துள்ள பகுதி மணவாடி ஊராட்சியாகும்.மணவாடி ஊராட்சிக்குஉட்பட்ட அய்யம்பாளையம் மங்களம் நகர் ,கல்லுமடை காலனி ,பெருமாள் பட்டி ,காலனி மருதம்பட்டி காலனி, மாணிக்கபுரம் ,சின்னத்தம்பி பாளையம் உள்பட 21 குக்கிராமங்கள் நிறைந்த பகுதியாகும் .இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி உட்பட்ட 21 இடங்களில்பொது குடிநீர் குழாய் அமைத்து தினசரி ஒரு மணி நேரம் காவிரி நீர் விநியோகம் செய்யப்படுகிறது.பொதுமக்களின் அன்றாட தேவைக்கு நிலத்தடி நீரை ஆழ்குழாய் எடுத்து பயன்படுத்துகின்றனர்.ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு தோட்டத்தில் உள்ள வீடுகளுடன் பெருவாரியான மக்கள் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஏபிகந்தசாமி தனது முயற்சியால் கரூர் டெக் சிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகளை நாடி மணவாடி ஊராட்சியில் அய்யம்பாளையம் அருகே அமைந்துள்ள குளத்தை தூர்வாரி காட்டு வாரி தண்ணீர் வரக்கூடிய இடங்களை தூர்வாரிநீர் தங்குதடையின்றி ஏறுமாறு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் சமுதாய வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வரும் கரூர் டெக்ஸிட்டி ரோட்டரி கிளப் சங்கத் தலைவர் வடிவேல், ஜவுளி ஏற்றுமதி சங்கத் தலைவர் மெட்ரோ கோபால், நிலா எக்ஸ்போர்ட் உரிமையாளர் நல்லசிவம் ஆகியோர்தனிக் கவனம் செலுத்தி ரோட்டரி நிர்வாகிகளிடம் குளத்தை சுத்தப்படுத்தி தூர்வாவதால் கிடைக்கக்கூடிய நன்மை பற்றி எடுத்துக் கூறி அதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மணவாடி கஸ்பா பகுதியில் இருந்து காட்டுவாரி தண்ணீர் செல்லும் ஓடையைமுதல் 6 அடி ஆழப்படுத்தி சீத்தமரங்களை அகற்றி குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டது. காட்டு வாரி வாய்க்கால் 40 அடி அகலம் நிறைந்த பகுதியாகும் இதனால் அப்பகுதியிலும் தண்ணீர் பெறுவதால் நீர் நிலைகளில் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு அதிகம். அய்யம்பாளையம்அரசு மேல்நிலை பள்ளி அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளத்தை 25 அடி அளபடுத்தி மையப் பகுதியில் நீர் நீர் அளவு மானியை பொருத்திபணிகள் நடைபெற்று உள்ளது.

குளத்தை சுற்றி சுமார் 20அடி சாலை அமைத்து அப்பகுதியில்சுமார் ஆயிரம் பனை மரத்து கொட்டைகளை ஊன்றி பனை மரம் வளர தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25 அடிஆழம் என்பதால் குளத்தை சுற்றி10 அடி உயரத்திற்கு பென்சிங் வேலி அமைத்து தருமாறு கரூர் வைஸ்யா வங்கியை ஊராட்சி தலைவர் கேட்டு கொண்டுள்ளனர்.வங்கி நிர்வாகமும் சமூக அக்கறையுடன் வேலி அமைத்து தர சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கான பணியும் விரைவில் நடைபெற உள்ளது தற்போது விரைவில் துவக்க விழா நடை பெற இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ஏ பி கந்தசாமி தெரிவித்தார்.

சமுதாய சிந்தனைகளின்படி செயல்பட்டு குளத்தை புதுப்பித்து தந்த கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப்பை பொதுமக்கள் பாராட்டினர். இவ்வாறு அய்யம்பாளையம் குளம் சரி செய்யப்படுவதால் செல்லிபாளையம் மருதம்பட்டி பட்டி காலனி மாணிக்கபுரம், ஏமூர் ஊராட்சியின் ஒரு பகுதி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பெருவாரியான கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதனால் கால்நடைக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Related Stories: