ஜூன் 4க்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் பதில்

திருச்சி: திருச்சியில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்தியில் 3வது முறையாக பாஜ ஆட்சி அமைந்து மோடி பிரதமர் ஆவது உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கருத்து கணிப்புகள் முடிவுகளும் அதையே சொல்கிறது. 4ம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரிய வரும். தேர்தல் முடிவுக்கு (ஜூன் 4ம் தேதிக்கு) பின்னர் அதிமுகவின் தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா? என்பது தொடர்பாக கருத்து சொல்வது நல்லதில்லை.

தேர்தல் முடிவுக்கு பின்னர் அதை பற்றி பேசிக்கொள்ளலாம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கோயிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் அதிகமாக கோயிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோயிலுக்கு செல்வதை பற்றி கருத்து சொல்வது நன்றாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜூன் 4க்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: