சிங்கம்புணரி அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை விரைந்து  சீரமைக்க வேண்டும்-பெற்றோர் கோரிக்கை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வேங்கைப்பட்டி, காட்டு கருப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் 142 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள மூன்று வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறையின் போது  பள்ளி மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுந்து. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கல்வி அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் இருக்க வேண்டாம் எனவும் மாற்று இடத்தில் பள்ளி செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து பழைய ஓட்டுக் கட்டிடம் மற்றும் அங்கன்வாடி, இ சேவை மைய கட்டிடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்து வருகின்றனர், மழைக்காலங்களில் மாணவர்கள் இடி நெருக்கடியால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் சமையலறை இதுவரை கட்டப்படவில்லை. அத்துடன் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏதுமின்றி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: