பெங்களூரு-அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா டிச. 2-ல் சேவையை தொடங்கும்

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து மீண்டும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையை டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா அறிமுகம் செய்திருக்கிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவை இல்லாத நிலையில் துபாய், கத்தாறு அல்லது லண்டன், சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானங்களிலேயே பயணிகள் சென்று வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கியது.

ஆனால் கொரோனா காரணமாக போதிய வரவேற்பு இல்லை என்று கூறி கடந்த மார்ச் மாதம் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு சிலிக்கான சிட்டிகளுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அன்மைக்காலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி முதல் பெங்களூரு- சான் பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதாக டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா அறிவித்திருக்கிறது. வாரத்தின் மூன்று முறை இந்த விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: