கனமழையால் குரங்கணி மலைச்சாலையில் 6 இடங்களில் மண் சரிவு

போடி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகம் - கேரளாவை இணைக்கும், போடி அருகே குரங்கணி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சாலையில் சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே பாறைகள் உருண்டு, மரங்கள் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் மண்ணை அப்புறப்படுத்தி துரித நடவடிக்கை எடுத்தனர்.

தேனி கோட்ட பொறியாளர் ரமேஷ், கோட்ட உதவி பொறியாளர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களிடம் இயற்கை பேரிடர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; பாதிப்பு ஏற்பட்டால் உடனே சீரமைத்து விட வேண்டும் என உத்தரவிட்டனர். குரங்கணி மலைச்சாலையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவுகளை உடனே சீரமைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: