வீராங்கனை பிரியா மரணத்தை அரசியலாக்க வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வீராங்கனை பிரியா மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் கால அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மருத்துவர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட துயரமான சம்பவம்; வீராங்கனை பிரியா இறப்பை அரசியலாக்க வேண்டாம். துயர சம்பவத்தை மேலும் தூண்டி விட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம்.

குடும்பத்தினர் வீராங்கனையின் உடலை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டனர். ரத்த நாளங்கள் பாதிப்பின் காரணமாக பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார். விசாரணையில் மருத்துவர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டது தெரியவந்தது. முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவி பிரியாவை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என விசாரிக்கப்படும். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. என்ன தவறுகள் நடந்துள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வீராங்கனை பிரியா விவகாரத்தில் சட்டப்படியும், விதிகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சை அளித்ததில் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

Related Stories: