ஜிஎஸ்டியில் பெட்ரோல்: ஒன்றிய அரசு தயார்

ஸ்ரீநகர்: ‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு தயார்’ என  ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று கூறியதாவது:  பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புதல் தர வேண்டும். மாநில அரசுகள் சம்மதித்தால் நாங்களும் தயாராக உள்ளோம். இதுதான் என்னுடைய புரிதல். இதை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது அடுத்த பிரச்னை. அதுகுறித்த கேள்வியை நிதியமைச்சரிடம் விட்டு விடுவோம். மதுபானம், எரிபொருள்கள்  வருவாய் ஈட்டும் பொருட்கள். எனவே இந்த திட்டத்துக்கு மாநில அரசுகள் சம்மதிக்க வாய்ப்புகள் குறைவு. பணவீக்கம் மற்றும் இதர பிரச்னைகள் குறித்து ஒன்றிய அரசு மட்டுமே கவலைப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் வந்த போது, இந்த விவகாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வைக்கும்படி நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வர அம்மாநில நிதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: