ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: 25 பேருக்கு அர்ஜுனா விருது

டெல்லி: விளையாட்டு வீரர், வீராங்கணைகள் 25 பேருக்கு அர்ஜுனா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள்டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் பூனியா, பேட்மிண்டனில் லக்‌ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது கிர்க்கெட் வீரர் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்தம் போட்டியில் ராஜ்சிங் ஆகியோருக்கு விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயாந்த் சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டது. இவ்விருதானது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு வழங்கப்படும்  விருதுகள் ஆகும் . விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை வரும் 30-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

Related Stories: