10 பேர் செய்யும் வேளாண் பணிகளை ஒரே நேரத்தில் எளிதாக செய்யும் அக்ரிஈஸி இயந்திரம் கோவையில் அறிமுகம்..!

கோவை : வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரிஈஸி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன கால கட்டத்தில் நிலங்களில் இறங்கி உழவுப் பணிகளை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. அதனை ஈடுகட்டும் வகையில் கோயம்புத்தூரில் முழுவதும் பேட்டரியால் இயங்கும் அக்ரிஈஸி என்னும் விவசாய இயந்திரம் அறிமுக செய்யப்பட்டுள்ளது. உழவுப் பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்துவது போல களையெடுப்பதற்கு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பலக்லைக்கழக துணை வேந்தர் முனைவர் சீதாலட்சுமி கலந்து அக்ரிஈஸி இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

களையெடுப்பது, மருந்து தெளிப்பது, பளு தூக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்ரிஈஸி இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலை ஆட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்ய முடியும். மேலும், களையெடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் தன்மையை பொறுத்து இந்த இயந்திரத்தை 5 மாறுப்பட்ட வேகங்களில் இயக்க முடியும். ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் இந்த அக்ரிஈஸி இயந்திரத்தை நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: