புளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் டிஃப்பனி டிரம்புக்கு திருமணம் நடந்தது. இந்த விழாவில் டிரம்பின் முன்னாள் மனைவியும் கலந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் - இவானா டிரம்ப் தம்பதியின் மகள் டிஃப்பனி டிரம்ப் (29) என்பவருக்கும், பிரபல தொழிலதிபரின் மகனான மைக்கேல் பவுலோஸ் (25) என்பவருக்கும் ஃபுளோரிடாவின் பாம் பீச்சில் திருமணம் நடந்தது.