கேரளாவில் மீண்டும் ஆப்பிரிக்க காய்ச்சல்: 150 பன்றிகளை கொல்ல முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தவிஞ்சால் உள்பட சில பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் பரவியது. இதையடுத்து அப்பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மானந்தவாடி அருகே எடவகா பகுதியைச் சேர்ந்த நாஷ் என்பவரின் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சில பன்றிகள் திடீரென செத்தன. இதையடுத்து அந்த பன்றிகளின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் பரவியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து எடவகா பகுதியிலுள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் 150 பன்றிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றளவில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: