புத்த மதத்திற்கு மாறிய வில்லன் நடிகர்

சென்னை: கமல்ஹாசன் நடித்த ‘விருமாண்டி’ படத்தில் சிறை வார்டனாக அறிமுகமானவர், சாய் தீனா. பிறகு ‘எந்திரன்’, ‘தெறி’, ‘வட சென்னை’, ‘ராஜா ராணி’, ‘மாநகரம்’, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். வட சென்னையில் வசித்து வரும் தீனா, சாய்பாபா மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது பெயரை ‘சாய் தீனா’ என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். புத்த துறவி மவுரியா முன்னிலையில், புத்த மதத்தின் 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு அவர் புத்த மதத்தில் இணைந்துள்ளார்.

Related Stories: