போதைப் பொருளுடன் மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் எம்டிஎம்ஏ போதைப் பொருளுடன் மலையாள நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு கும்பல் போதைப் பொருள் கடத்துவதாக எஸ்பி ஐஸ்வர்யா டோங்க்ரேவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சூர் கொரட்டி போலீசார் மேலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் 5 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருச்சூர் கோடாலி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் அருண் மற்றும் மூணுமுறி பகுதியைச் சேர்ந்த குமாரன் மகன் நிகில் என்பது தெரியவந்தது.

இவர்களில் அருண் சில மலையாள படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து உள்ளார். அவர்களுக்கு போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: