கொரோனா 2வது அலை ஓயும் நிலையில் பரவுகிறது ‘டெல்டா பிளஸ்’

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை குறைந்து வரும் நிலையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 20 பேர் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா முதல் அலை ஓயத் தொடங்கிய நிலையில், ‘டெல்டா’ வகை உருமாற்ற வைரசால் கடந்த மார்ச்சில் 2ம் அலை ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய 2ம் அலை தற்போது சரியத் தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ‘டெல்டா’ வைரஸ் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ என உருவாகி உள்ளது. வரும் அக்டோபரில் 3ம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் 20 பேர் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘டெல்டா பிளஸ்’ வைரசால் 15 முதல் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 8 பேருக்கு பரவியிருக்கிறது. இந்த வகை வைரஸ் மிகத் தீவிரமானது என்பதால் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.88 நாட்களில் குறைந்த பாதிப்புமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53,256 பேர் புதிதாக தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த 88 நாட்களில் குறைந்த பாதிப்பு  எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35  ஆயிரத்து 221 ஆகும். * ஒரே நாளில் 1,422 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. * நாடு முழுவதும் 7 லட்சத்து 2 ஆயிரத்து 887 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதுவரை 28 கோடியே 36 ஆயிரத்து 898 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்….

The post கொரோனா 2வது அலை ஓயும் நிலையில் பரவுகிறது ‘டெல்டா பிளஸ்’ appeared first on Dinakaran.

Related Stories: