ஆர்.எல்.வி. விண்கலம் முதன்முறையாக விமானம்போல ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனைக்கு இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: மீண்டும் பயன்படுத்த கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இந்திய விண்வெளி ஆய்வு மையம் விரைவில் மேற்கொள்ள உள்ளது. மீண்டும் பயன்படுத்த கூடிய ஆர்.எல்.வி. விண்கலத்தை விண்ணில் ஏவி அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ள உள்ளது.

இந்த சோதனை கர்நாடகா மாநிலம் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் மேற்கொள்ள பட உள்ளது. இந்த சோதனையில் போது ஆர்.எல்.வி. விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டு ஓடுதளத்தில் இருந்து 4 அல்லது 5 கி.மீ. தூரத்தில் இருந்து விடுவிக்கப்படும். அதன்பின் ஆர்.எல்.வி. விண்கலம் விமானம் போல பறந்து விமான ஓடுதளத்தில் சக்கரங்கள் உதவியுடன் தரையிறங்கும். இதுபோன்ற பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். பருவநிலையை பொறுத்து ஆர்.எல்.வி. தரையிறக்க சோதனை தேதி முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. 

Related Stories: