இடுக்கி அருகே சதுரங்கப் பாறையில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்

பாலக்காடு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனாவை அடுத்துள்ள சதுரங்கப்பாறையில் நீலக்குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்குவதை பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்தவாறு உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனாவை அருகே உள்ள சுற்றுலாத்தலமான சதுரங்கப்பாறை. இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துள்ளது. இவை சுற்றுலா பயணிகளையும் கண்களை கவர்ந்தவாறு உள்ளது. இதனால் இங்கு காதல் ஜோடி, குடும்பத்தினரும், சுற்றுலா பயணிகளும் படையெடுத்த வருகின்றனர். பனிப்பொழி, கடுமையான குளிர் வீசுவதையும் பாராமல் மக்கள் தங்களது மொபைல் போன் மூலமாக புகைப்படம், வீடியோக்கள் எடுத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அரசு டிப்போவிலிருந்து திருச்சூர், பெரும்பாவூர், கோதமங்கலம் வழியாக மூணாறுக்கும், கட்டப்பனா அரசு டிப்போவிலிருந்து மூணாறு, தேவிக்குளம், மறையூர், உடுமலை, பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டிற்கும் அரசுப் பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்சில் சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, மறையூர், தேவிக்குளம், வழியாக மூணாறு, கட்டப்பனா சென்று திரும்ப இவ்வழித்தடத்தில் பாலக்காடு வந்தடைகிறது. இடுக்கி மாவட்டத்திலிருந்து பாலக்காடு மாவட்டத்தில் விடுதிகளில் தங்கிப்படிக்கின்ற கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இந்த பஸ்கள் பெரிதும் வசதியாக உள்ளது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை மூணாறு வழித்தடத்தில் காட்டுயானைகள் கூட்டம், மான்கூட்டம், சிங்கவால் குரங்குகள், மயில்கள், வரையாடுகள் ஆகியவை மேய்வதின் காட்சிகளை கண்டு ரசித்தவண்ணம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மலையருவிகள், இயற்கைக்காட்சிகளை பார்க்க உகந்த சுற்றுலாத்தலமாக மூணாறு விளங்குகிறது. மேலும், டீ, காபி தோட்டங்கள் ஆகியவற்றின் பசுமையான காட்சியும் மக்களை மிகவும் கவர்ந்தவாறு உள்ளது.

Related Stories: