தேசிய அரசியலில் பரபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 2 நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். மம்தா பானர்ஜியை வாசலுக்கு வந்து முதல்வர் வரவேற்றார். கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் மம்தா வழங்கினார். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை மம்தா பானர்ஜி சந்திப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் நிதிஷ் குமார் சந்திர சேகர ராவ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் உள்ளனர். மறுபுறம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மம்தாவும் தேசிய அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே அரசியல் தொடர்பான விஷயங்கள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விவாதிப்பேன் என கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பேட்டியளித்திருந்தார்.

Related Stories: