ஓட்டலில் வாங்கிய பார்சல் சட்னியில் கரப்பான் பூச்சி-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சட்னியில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர். வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர், நேற்று காலை செவ்வாய்பேட்டையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் இட்லி பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது சட்னியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கர் உணவக மேலாளரிடம் சென்று முறையிட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுருளி மற்றும் அலுவலர்கள் ஓட்டலுக்கு சென்று சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா என ஆய்வு நடத்தினர். மேலும் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினை ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். ஆய்விற்குப் பிறகு வரும் முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: