டோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண்

சென்னை: டோனி தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க உள்ளார். கிரிக்கெட் வீரர் டோனி படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். டோனி என்டர் டெயின்மென்ட் என்ற இந்நிறுவனத்தின் மூலமாக பலமொழிப் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இப்படத்துக்கு டோனி மனைவி சாக்‌ஷி கதை எழுதியுள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். ஏற்கனவே இவர், டோனி நடித்த ‘அதர்வா’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த புதுப்படத்துக்கு டைட்டில் முடிவாவில்லை. ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் முக்கிய நடிகர்களின் தேர்வு நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியிடப்படுகிறது.

Related Stories: