உக்ரைனில் இருந்து படிப்பை முடித்து விட்டுதான் வருவோம், இல்லாவிட்டால்... இந்திய மாணவர்கள் சோகம்

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 8 மாதமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அங்கு மருத்துவம் படித்த சுமார் 20,000 மாணவர்கள் கடும் முயற்சிக்குப் பின் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆனால் நாடு திரும்பினாலும் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உக்ரைனில் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால், அம்மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி இருப்பதால், இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைன் செல்ல வேண்டாம் எனவும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்பவும் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை சில மாதங்களுக்கு முன் மீண்டும் உக்ரைனுக்கு சென்ற 1500 இந்திய மாணவர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் எங்கள் மருத்துவ படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப மாட்டோம். இல்லாவிட்டால் பிணமாகத்தான் வருவோம். என்று தெரிவித்து உள்ளனர்.

Related Stories: