பொருளாதார கொள்கைகள் படுதோல்வி: பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா..!

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக டிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் இவர் பெற்றார். லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சராக இருந்த பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார். இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து சுவெல்லா ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகவேண்டும் என்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகக்குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்தவரானார் லிஸ் பிரஸ்.

Related Stories: