உலக கோப்பை டி.20 கிரிக்கெட்; பி குரூப்பில் சூப்பர் 12 சுற்று வாய்ப்பு யாருக்கு?.. வாழ்வா, சாவா நிலையில் நாளை மல்லுக்கட்டும் 4 அணிகள்

ஹோபார்ட்: 16 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்பட 8 ணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு 8 அணிகள் இரு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகிறது.

இதில் பி குரூப்பில் நாளை காலை 9.30 மணிக்கு ஹோபர்ட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அயர்லாந்து-வெஸ்ட்இண்டீஸ், பிற்பகல் 1.20 மணிக்கு ஸ்காட்லாந்து-ஜிம்பாப்வே மோதுகின்றன. இந்த குரூப்பில் 4 அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளன. இதனால் ரன் ரேட் ஒரு பொருட்டாக இருக்காது. நாளை இரு போட்டியிலும் யார் வென்றாலும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இதனால் வாழ்வா, சாவா நிலையில் 4 அணிகளும் களம் இறங்கும். 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்த நிலையில் நேற்று ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. முதல் போட்டியில் அயர்லாந்தை ஜிம்பாப்வே வென்றிருந்தது. இதனால் யார் வலுவான அணி என்பதை கணிக்க முடியாது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் கூட வென்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related Stories: