பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை


பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து 3வது முறையாக பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியுடன் (28 வயது, 15வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (23 வயது, 1வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இகா முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் இகா ஸ்வியாடெக்குக்கு கிடைத்துள்ளது. பிரெஞ்ச் ஓபனில் அவர் 2020, 2022, 2023, 2024ல் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2022ல் யுஎஸ் ஓபன் பட்டம் உள்பட அவர் இதுவரை 5வது கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இகாவுக்கு முதல் பரிசாக ரூ21 கோடியும், 2வது இடம் பிடித்த ஜாஸ்மினுக்கு ரூ10.5 கோடியும் வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் – அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) மோதுகின்றனர்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: