நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது: பொதுமக்களிடம் மேயர் அறிவுரை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 26வது வார்டுக்கு உள்பட்ட ஊட்டுவாழ்மடம், கருப்புகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்றும், இருசக்கர வாகனத்தில் சென்றும் ஆய்வு செய்தார். அப்போது ஊட்டுவாழ்மடம் பகுதியில் பழையாற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்த மேயர் மகேஷ், நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது.

இதனால் நீர் மாசுபடுவதுடன், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி கேட்டு இருந்தனர். குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உடனே செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

சாலை வசதி விரைசில் சரிசெய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாநகர நல அதிகாரி டாக்டர் ராம்குமார், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், நகர அமைப்ப ஆய்வாளர் ஜாண், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் சொர்ணதாய், திமுக மாநகர செயலாளர் ஆனந்த் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories: