இந்திய வம்சாவளியான துளசி கப்பார்ட் ஜனநாயக கட்சியிலிருந்து விலகல்; அமெரிக்க அரசியலில் பரபரப்பு

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கான முன்னாள் வேட்பாளர் துளசி கப்பார்ட், ஜனநாயக கட்சியில் விலகினார். அமெரிக்க அதிபர் பதவிக்கான முன்னாள் வேட்பாளரும், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியும், இந்திய வம்சாவளியுமான துளசி கப்பார்ட் மீது இனவாத புகார்கள் எழுந்தன. இதனால் ஜனநாயகக் கட்சியில் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்தன. இந்நிலையில் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் இனிமேல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக நீடிக்க முடியாது.

அமெரிக்காவின் ஒவ்வொரு பிரச்னையையும், இனவாத ரீதியாக ஜனநாயகக் கட்சி அணுகுகிறது. மிகவும் கோழைத்தனமாக செயலாக பார்க்கிறேன். இனவாத அடிப்படையில் பிரச்னைகளை அணுகுவதால், வெள்ளையர்களுக்கு எதிரான இனவாதத்தை ஜனநாயக கட்சி தூண்டுகிறது. என்னைப் போல் சிந்திக்கும் கட்சியின் நிர்வாகிகள் சிலரும், கட்சியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ​இன்றைய ஜனநாயகவாதிகள் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்திற்கான எதிரிகளாக உள்ளனர். ஜனநாயக கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பாளர்களின் குரலை நசுக்குகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: