மனைவியை பிரிந்த சோகம் சட்டப்பேரவைக்கு 3 குண்டு மிரட்டல்: வலிய வந்து சிக்கிய இன்ஜினியர்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவை கட்டிடத்துக்கு தொடர்ந்து மூன்று முறை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது  செய்யப்பட்டார். கர்நாடகாவில், பெங்களூரு ஊரக மாவட்டம் ஹெப்பகோடி ஆனந்த் நகரை  சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் எலக்ட்ரானிக் சிட்டியில் தனியார் ஐடி நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த  வெள்ளிக்கிழமை நள்ளிரவு விதான சவுதா தலைமைச் செயலாளர் அலுவலகத்தை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்ட இவர், விதான சவுதாவில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்  எந்த நேரத்திலும் அது வெடிக்கும் என்றும் மிரட்டி உள்ளார். இதே போன்று  தொடர்ந்து மூன்று முறை மிரட்டியுள்ளார். இது  குறித்து போலீசார் விசாரித்து, பிரசாந்த் குமாரை (41) கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குடும்ப பிரச்னையால் மனநலம்  பாதித்தவர் போல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர் தனது செல்போனில்  விதானசவுதா அரசு அலுவலக தொலைபேசி எண்களை தேடி உள்ளார். அதன் மூலம்  லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: