அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த மூவர் குழு கூட்டம்: கே.நந்தகிஷோர், ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: உச்சநீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த  மூவர் குழு கூட்டம் தலைமைச்செயலகத்தில் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இன்று 7.10.2022 நடைபெற்றது.

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, அரசு விளம்பரங்களை முறைப்படுத்தி செயல்படுத்த அமைக்கப்பட்ட மூவர் குழு தலைவர் திரு.கே.நந்தகிஷோர், இ.ஆ.ப., (ஓய்வு), உறுப்பினர் செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., திரு.சிவா மெய்யப்பன், பொதுமேலாளர் (Response),  திரு.டி.சேகர், மூத்த நிருபர் (Senior Correspondent) டெக்கான் கிரானிக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

அரசு விளம்பரங்களை முறைப்படுத்துவது மற்றும் அரசின் விளம்பர கொள்கையினை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்கான கருத்துக்களை tnadvtcommittee@gmail.com  என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: