சதுரகிரி செல்ல நாளை முதல் 3 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தரிசனம் செய்ய முதலில் அனுமதி அளித்தனர். கோயில் அருகே மலைப்பகுதியில் தீ பரவுவதால், இன்று ஒரு நாள் அனுமதி இல்லை, நாளை முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது. பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு இன்று பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடக்கிறது.

Related Stories: