பழநி அருகே பண்ணையில் தீ விபத்து; 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி சாவு

பழநி: பழநி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கர்ணன் (65). விவசாயி. தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிப்பண்ணையில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை விட்டுள்ளார். நேற்று அதிகாலை கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதில் இருந்த சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: